சென்றலைட்ஸ் அணிக்கு முதல் வெற்றி
![]() |
சென்றலைட்ஸ் அணிக்கு முதல் வெற்றி |
கொக்குவில் வளர்மதி முன்னேற்ற கழகம் நடாத்தும் "விக்ரம் ராஜன் கங்கு" ஞாபகார்த்த துடுப்பாட்ட தொடரில் இன்று(19/02) கொக்குவில் இந்து கல்லூரி் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் யாழ் பல்கலை கழகத்தை 6இலக்குகளால் வீழ்த்திய சென்றலைட்ஸ் அணி குழு நிலையில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்றலைட்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் ஆடிய பல்கலை கழக அணி நிதர்ஷன்-41 துவாரகசீலன்-20 ஓட்டங்களின் உதவியுடன் 151/10(29.5) ஓட்டங்களை பெற்றுக்கொண்டது பந்துவீச்சில் ஜெரிக்துஷாந்-3/24(6) நிரோஷன்-3/19(4) பதிலுக்கு 152 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணி- 156/5(25.2) ஓட்டங்களை பெற்று 5இலக்குகளால் வெற்றி பெற்றது அணி சார்பாக ஜெனோஷன்-71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
வளர்மதி தொடரின் முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்
Post a Comment