அரியாலை தாச்சி : இறுதி சமர் இன்று

அரியாலையின் தாச்சி இறுதி சமர் இன்று
அரியாலை தாச்சி:இறுதி சமர் இன்று
அரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்ட தாச்சி சங்கத்தின் அனுமதியுடன் நடாத்தப்படும் தாச்சி தொடரின் இறுதிப்போட்டி மற்றும் மூன்றாம் இடத்திக்கான போட்டிகள் இன்று (12.02.19) இரவு 7மணி்  முதல் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் மின்னொளியில் நடைபெற உள்ளது.

இறுதிப்போட்டியில் வைகறை அணி எதிர்  தையிட்டி வள்ளுவன் அணிகள் மோதவுள்ளன அதே தொடரின்   3ம் இடத்திற்கான போட்டியில் ஆலடி சிந்து எதிர் நவாலி தென்றல் அணிகள் மோதவுள்ளன.

நேற்றைய(11.02.19) நடைபெற்ற 1வது அரையிறுதியில் வள்ளுவன் அணி நவாலி தென்றல் அணியினை 2:1(பழம்) ரீதியிலும், 2வது அரையிறுதியில் வைகரை அணி ஆலடி சிந்து அணியினை 6:5(பழம்) ரீதியிலும் வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தன.அரியாலையின் தாச்சி இறுதி சமர் இன்று
அரியாலையின் தாச்சி இறுதி சமர் இன்று
விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள  www.yarlsports.com உடன் இணைந்திருங்கள்.

No comments

Powered by Blogger.