யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வு ஏற்கனவே தொடங்கிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்க சுமதிபாலா கூறியுள்ளார்.

நகரின் மண்டைதீவு பகுதியில் உள்ள 50 ஏக்கர் நிலத்தில் இதற்கான முதல்கட்ட ஆய்வை சுமதிபாலா நடத்தியுள்ளார்.

இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதியில் தான் அமைந்துள்ளன.

ஆனால் வடக்கு பகுதியில் இதுவரை மைதானங்கள் அமைக்கப்படவில்லை, இங்கு மைதானம் அமைக்கப்பட்டால் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்ட முதல் சர்வதேச கிரிக்கெட் மைதானமாக இருக்கும்.

No comments

Powered by Blogger.