ஐ.பி.எல்.போட்டியில் இலங்கை வீரர்கள் இவ்வளவுதானா!

இந்தியாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்று முடிந்தது.

இந்த ஏலத்தில் இலங்கை அணியைச் சேர்ந்த 18 வீரர்களின் பெயர் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதில் இரண்டு வீரர்கள் மாத்திரமே அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கை அணியைச் சேர்ந்த மஹேல ஜயவர்தன பயிற்றுவிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவை தெரிவுசெய்துள்ளது. இவரை இந்திய ரூபாய் பெறுமதியில் 50 இலட்சத்துக்கு மும்பை அணி வாங்கியுள்ளது.

இதேவேளை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீரவை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வாங்கியுள்ளது. இவர் ஆரம்பத்தில் எந்த அணிகளாலும் வாங்கப்படாத நிலையில், 3ம் தர ஏல வாசிப்பின் போதே ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

துஷ்மந்த சமீரவை இந்திய பெறுமதியில் ரூபாய் 50 இலட்சத்துக்கு ராஜஸ்தான் அணி வாங்கியிருந்தது.

குறித்த இருவரும் முதல் தடவை ஐ.பி.எல். ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கை அணியை சேர்ந்த முன்னணி வீரர்களான குசல் பெரேரா, லசித் மலிங்க, திசர பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை எந்த அணிகளும் வாங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.