 |
அளவெட்டி மத்தியின் கரப்பந்தாட்ட போட்டி முடிவு |
அசத்தல் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது வளர்மதி வி.க அளவெட்டி மத்தி வி.க திருகுமரன்-லஜிதன் ஞாபகார்த்தமாக நடாத்தும் கரப்பந்தாட்ட சுற்றுபோட்டியில் புத்தூர் வளர்மதி வி.க எதிர்த்து புத்தூர் சென்றல் ஸ்ரார் வி.க மோதியது.புத்தூர் வளர்மதி வி.க முதல் இரண்டு சுற்றுக்களை இலகுவாக கைப்பற்றியது மூன்றாவது சுற்று புத்தூர் சென்றல் ஸ்ரார் வி.க அதிரடி காட்ட தொடங்கியது போட்டி விறுவிப்பான கட்டத்தை அடைய வீரர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட புத்தூர் சென்றல் வி.க வீரருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது.இறுதிநேரத்தில் மீண்டும் அசத்தல் ஆட்டத்துடன் வளர்மதி வி.க.3:0 என்ற செற்கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியின் சிறந்த வீரர் - நிகேதன்.
Post a Comment