இலங்கை வலைப்பந்தாட்ட தேசிய வீராங்கனை எழிலேந்தினிக்கு வீடு அன்பளிப்பு.


2018ஆம் ஆண்டின் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனான
இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனையும் யாழ் மாவட்ட வின்ஸ்ரார் விளையாட்டு கழக வீராங்கனையும் ஆன எழிலேந்தினி சேதுகாவலன் உட்பட 12 வீராங்கனைகளுக்கும் நேற்று புதிய வீடுகள் வழங்கிவைக்கப்பட்டன.

வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் மொறட்டுவயின் அமைக்கப்பட்ட சாயுராபுர வீடமைப்பு வளாகத்திலேயே இந்த 12 வீடுகளும் சம்பியன் இலங்கை அணியின் வீராங்கனைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவால் இந்த வீடுகள் கையளிக்கப்பட்டன.

2018ஆம் ஆண்டு செப்ரெம்பரில் சிங்கப்பூரில் ஆசிய சம்பியன்ஷிப் வலைபந்தாட்டத் தொடர் நடைபெற்றது.

இறுதிப் போட்டி சிங்­கப்­பூரின் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் செப்ரெம்பர் 9ஆம் திகதி நடைபெற்றது.

இதில் இலங்கை அணி 69 – 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் சம்பியின் பட்டத்தை சுவீகரித்து கொண்டுள்ளது.

இலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷினி சிவலிங்கம் மற்றும் எழிலேந்தினி சேதுகாவலன் ஆகிய  இரண்டு வீராங்கனைகள் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.