உடற்கல்வி ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வீர சூரி விருது

உடற்கல்வி ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வீர சூரி விருது
உடற்கல்வி ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வீர சூரி விருது

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் 'வீர சூரி விருது" வழங்கும் விழா எதிர்வரும் 17 ஆம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு இராமநாதன் வீதி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மடு; கல்வி வலய கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில், கு.பகீரதன் (வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம்), ந.செந்தூரன் (தெல்லிப்பழை யூனியன் கல்லூரி), ப.வசந்தகுமார் (தொண்டமனாறு வீரகத்தி மகா வித்தியாலயம்), நா.ரவீந்திரன் (மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம்), பா.பிரதீபன் (அளவெட்டி அருணோதய கல்லூரி), ஜெனிஸ்ரன் இதயகுமார் (இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம்), சோ.ஹரிதரன் (கிளிநொச்சி இந்துக் கல்லூரி), ந.மதிவதனன் (பாசையூர் சென்.அன்ரனீஸ் மகா வித்தியாலயம்), ப.இராஜமனோகரன் (கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி), யோ.குபேசன் (ஊர்காவற்றுறை சென்.அன்ரனீஸ் கல்லூரி) ஆசிரியர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.