பிரிவு-2 நுழைந்தது யாழ் மத்திய கல்லூரி

பிரிவு-2 நுழைந்தது யாழ் மத்திய கல்லூரி

15வயதிற்க்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான தேசிய ரீதியான துடுப்பாட்ட தொடரின் அரையிறுதி போட்டியில் பலாங்கொட தேசிய பாடசாலை அணியினை வீழ்த்தியதன் மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த யாழ் மத்திய கல்லூரி பிரிவு-2 அணியாகவும் தரம் உயர்த்தப்பட்டது....

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரி் அணி தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்ய மத்திய கல்லூரி அணி 153/9(43) துடுப்பாட்டத்தில் மத்திய கல்லூரி் சார்பாக கஜன்-57 ,கௌதமன்-33 ஒட்டங்களையும் பெற்று கொடுத்தனர். 154 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு ஆடிய பலாங்கொட தேசிய பாடசாலை அணி் யாழ் மத்தி் வீரர்களின் சிறந்த பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாது 83(33) ஓட்டங்களை மாத்திரம் பெற்று 68ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. பந்து வீச்சில் யாழ் மத்திய கல்லூரி சார்பாக கவிதர்ஷன் 6இலக்குகளினை கைப்பற்றினார்.

யாழ் மத்திய கல்லூரி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு yarlsports சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம். தொடர்ந்து yarlsports உடன் இணைந்திருங்கள்

No comments

Powered by Blogger.