நம்பர் 1 வீராங்கனையை வென்றார் சிந்து

நம்பர் 1 வீராங்கனையை வென்றார் சிந்து
நம்பர் 1 வீராங்கனையை வென்றார் சிந்து
பிரீமியர் பாட்மின்டன் லீக் போட்டிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர் அணியைச் சேர்ந்த டாய் ட்ஸி யிங்கை வென்றார் பி.வி. சிந்து. இதன் மூலம் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. பிரீிமியர் பாட்மின்டன் லீக் மூன்றாவது சீசன் போட்டிகள் நடக்கின்றன. மொத்தம் எட்டு அணிகள், பங்கேற்கும் இந்தப் போட்டி, நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கிறது.


தோல்வியடைந்தது. அடுத்த டையில், மும்பை ராக்கெட்ஸ் அணியை 4-3 என்ற கணக்கில் வென்றது. தனது மூன்றாவது டையில் டெல்லி டேஷர்ஸ் அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், நான்காவது டையில் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணியுடன் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி மோதியது. சென்னையில் நடந்த இந்தப் போட்டியில் 2-1 என்ற கணக்கில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி வென்றது. முக்கியமாக மகளிர் ஒற்றையரில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான தைவானின் டாய் ட்ஸி யிங்கை 2-1 என்ற செட் கணக்கில் சிந்து வென்றார். கேப்ரியாலே ஆட்காக் காயமடைந்ததால், கலப்பு இரட்டையரிலும் களமிறங்கிய சிந்து வெற்றியைப் பெற்றுத் தந்தார். இந்த டையில் வென்றதன் மூலம் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்கு இன்னும் உள்ளது.


No comments

Powered by Blogger.